(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
Buy machine oil in amazon
How to change oil an industrial sewing machine.
Jack f4 sewing machine oil change at home |
இந்த பதிவில் கமர்ஷியல் மற்றும் இண்ட்ஸ்ட்ரியல் தையல் மெஷினில் ஆயில் மாற்றுவது எப்படி என்று தெரிந்து கொள்வோம். ஆயில் மாற்றுவது என்றாலே அது தொடர்பான சில கேள்விகளும் எழுகிறது. அது என்ன கேள்விகள் மற்றும் அதற்கான பதிலும் இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.
1. ஆயில் ஏன் மாற்ற வேண்டும்
2 எவ்வளவு கால இடைவெளியில் ஆயில் மாற்ற வேண்டும்.
3 தையல் மெஷின் ஆயில் எங்கு கிடைக்கும்
4 ஆயில் மாற்றுவது எப்படி.
இப்போது இந்த கேள்விகளுக்கான விடைகளை பார்ப்போம்.
1 ஆயில் ஏன் மாற்றுகிறோம். ?
பொதுவாக அனைத்து வகை மெஷின்களுமே தடங்கள் இல்லாமல் அதன் முழு திறனில் இயங்கவும், மெஷினில் இயங்கும் பாகங்கள் தேய்மானம் ஏற்படுவதை தடுக்கவும் ஆயில் போடவேண்டும். குறைந்த வேகத்தில் இயங்கும் தையல் மெஷின்களுக்கு இயங்கும் பாகங்களுக்கு இடையில் மட்டும் ஆயில் gan மூலம் சிறிய துளி அளவில் சில சொட்டுகள் ஆயில் தையல்காரர்கள் போடுவதை பார்த்திருப்பீர்கள்.
ஆனால், மோட்டார் மூலம் அதிவேகத்தில் இயங்கும் தையல் மெஷின்களுக்கு, மெஷின் அடிபக்கம் ஆயில் tank வைத்து அதில் குறிப்பிட்ட அளவு ஆயில் நிரப்பி வைக்கவேண்டும். இந்த ஆயில் தையல் மெஷின் இயங்கும்போது அதன் எல்லா பாகங்களுக்கும் செல்லும் முறையில் மெஷின் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தையல் மெஷின் தேய்மானம் அடையாமல் தடுக்கபடுவதோடு முழுதிறனில் இயங்கவும் உதவுகிறது.
Industrial sewing machine oil tank |
2 ஆயில் மாற்ற கால இடைவெளி எவ்வளவு?.
வீடுகள் அல்லது கடைகளில் பயன்படுத்தப்படும் இண்ட்ஸ்ட்ரியல் அல்லது கமெர்சியல் தையல் மெஷின்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆயில் மாற்றவேண்டும். இண்ட்ஸ்ட்ரியில் பயன்படுத்த தையல் மெஷின்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஆயில் மாற்றுதல் வேண்டும். இந்த கால இடைவெளியில் ஆயில் மாற்றி பயன்படுத்தினால் தையல் மெஷின் நீண்ட காலம் பழுதடையமல் உழைக்கும். உதிரி பாகங்கள் மாற்ற வேண்டிய தேவை ஏற்படாது.
3.தையல் மெஷின் ஆயில் எங்கு கிடைக்கும்.?
தையல் மெஷின் ஆயில் எங்கே வாங்குவது என்று பலருக்கு குழப்பம் உள்ளது. தையல் மெஷின் எண்ணெய் அல்லது ஆயில் தையல் மெஷின் விற்பனை செய்யும் கடைகளில் கிடைக்கும். அடுத்து தையல் மெஷின் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் சிறு கடைகளில் கிடைக்கும். மேலும் தையலுக்கு தேவையான நூல் ஊசி போன்ற பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளிலும் கிடைக்கும். கடைகள் மட்டுமல்ல அமேசான் போன்ற ஆன்லைன் வெப்சைட்களிலும் கிடைக்கும்.
Industrial sewing machine oil removing |
4. ஆயில் மாற்றுவது எப்படி.?.
முதலில் 1/2 லிட்டர் மெஷின் ஆயில் வாங்கி கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒரு முறை ஆயில் மாற்ற தேவைப்படும் ஆயில் 1/2 லிட்டர் ஆகும். இப்போது தையல் மெஷினை முன் பக்கம் உள்ள குச்சியில் மெதுவாக கவனமாக சாய்த்து வைத்து கொள்ள வேண்டும். இப்போது மெஷின் அடியில் உள்ள ஆயில் டேங்க்ல் ஏற்கனவே ஊற்றிய பழைய ஆயில் இருக்கும். பழைய ஆயில் வெளியே எடுக்க வேண்டும்.
ஆயில் வெளியே எடுக்க இரண்டு முறை உள்ளது. அது என்னவென்று பார்க்கலாம். டேங்க்ன் பள்ளமான பகுதியில் ஒரு ஸ்க்ரு இருக்கும். அந்த ஸ்க்ரு கழட்டினால் ஆயில் அடியில் கொட்டும். அதை ஓரு பாத்திரத்தில் பிடித்து வைத்து கொள்ளலாம். முழு ஆயிலும் வடிந்த பின் கழட்டிவிட்ட ஸ்க்ரு வை இறுக்கி டைட் செய்து கொள்ள வேண்டும். ஆயில் வெளியே எடுக்க இது ஒரு முறை.
பழைய ஆயிலை வெளியே எடுக்கும் மற்றொரு முறை என்னவென்றால், பாஞ்சு வைத்து எண்ணையில் ஊற வைத்து உறிஞ்சி எடுப்பதாகும். இந்த முறையில் ஆயில் வெளியேற்ற ஸ்க்ரு டிரைவர் தேவை இல்லை. பாஞ்சை ஆயிலில் முக்கி உறிஞ்ச வைத்து வெளியே எடுத்து ஒரு பாத்திரத்தில் ஆயிலை பிழிந்து சேமிக்கலாம். பின்பு புதிய ஆயில் மாற்றலாம். நீங்கள் வீட்டில் தையல் செய்பவராக இருந்தால் இந்த முறை உங்களுக்கு சரியாக இருக்கும்.
ஆயில் மாற்றுவதற்கு முன் டேங்கின் அடி பாகத்தை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்ய கடினமாக இருக்கும் பட்சத்தில் சோப்பு தூள் பயன்படுத்தலாம். சோப்பு தூளும் தண்ணீரும் கலந்து சுத்தம் செய்தால் அடிபக்கம் படிந்து உள்ள ஆயில் போய்விடும். பிறகு ஆயில் டேங்கை நன்றாக குறைந்தது 1/2 மணி நேரம் உலரவிட வேண்டும். இனி புதிய ஆயிலை டேங்கில் ஊற்ற வேண்டும். ஆயில் டேங்கில் எவ்வளவு ஆயில் உற்ற வேண்டும் என்ற அளவீடு குறிக்கபட்டிருக்கும். அதில் அதிகபட்சம் மற்றும் குறைந்தபட்சம் என்ற அளவீடுகள் குறிக்கபட்டிருக்கும். இதில் அதிகபட்சம் என்ற குறியீடு வரை ஆயில் ஊற்ற வேண்டும்.
Industrial sewing machine oil changes |
ஆயில் மாற்றும் முறையை விரிவாக விளக்கும் ஒரு காணொளி பாருங்கள்
இதுவே ஆயில் மாற்றும் முறை. இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இதை சார்ந்த கேள்விகள் இருந்தால் கமென்டில் பதிவு செய்யுங்கள். நன்றி
You might like this post :
churidhar blouse neck designs galleryFolliw my youtube ;https://youtube.com/c/Dresstailor
1 comments:
Click here for commentsYou have done a good job by publishing this article about perrysburg oil change I appreciate your efforts which you have put into this article, It is a beneficial article for us. Thanks for sharing such informative thoughts.
Leave your comments ConversionConversion EmoticonEmoticon